/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளம் படைப்பாளிகளை கொண்டாடிய மேடை
/
இளம் படைப்பாளிகளை கொண்டாடிய மேடை
ADDED : மார் 09, 2025 11:37 PM

கோவை; ரத்தினம் கல்லுாரியின், விஷூவல் கம்யூனிகேஷன் துறை, ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறைகள்இணைந்து, ' எப் சீரிஸ் பெஸ்டிவல்' என்ற, கலை விழாவை நடத்தியது. இளைய படைப்பாளிகள் மற்றும் பேஷன் வடிவமைப்பாளர்களின் திறமைகளை கொண்டாடும் ஒரு முக்கிய மேடையாக, இந்த விழா அமைந்தது.
விழாவில், 50க்கும் மேற்பட்ட குறும்படங்கள், 15க்கும் மேற்பட்ட பேஷன் அணிகள் பங்கேற்றன. பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்று, போட்டியிட்டனர். சிறந்த ஐந்து குறும்படங்கள் மற்றும் சிறந்த ஐந்து பேஷன் நிகழ்ச்சிகளை, பார்வையாளர்கள் கண்டு வியந்தனர்.
பிரபல பாடகர் அந்தோணி தாசன், பாடகர்கள் வினைதா, அய்யனார், வருஷா குழுவினர், பல்வேறு பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
ரத்தினம் கல்விக் குழுமத்தின் இயக்குனர் ஷிமா, அறக்கட்டளை நிர்வாகி மேகா, முதன்மை வணிக அலுவலர் நாகராஜ், டீன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.