/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் அழைத்து வந்த கைதி தப்பியோட்டம்
/
ரயிலில் அழைத்து வந்த கைதி தப்பியோட்டம்
ADDED : ஏப் 04, 2024 10:31 PM

போத்தனுார்:கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அன்சாரி, 38. இவர்மீது கேரளா மற்றும் கர்நாடகா போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. அன்சாரியை கர்நாடகா போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்திருந்தனர்.
கர்நாடகா ஆயுதப்படை போலீசார் அன்சாரியை, கடந்த 2ம் தேதி ரயிலில் அழைத்துச் சென்று, திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின் கர்நாடகா போலீசார் மீண்டும் அவரை பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்க, 3ம் தேதி கொச்சுவேலி, பெங்களூரூ ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் அழைத்துச் சென்றனர். நள்ளிரவு, 12:50 மணிக்கு பாலக்காட்டில் இருந்து போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி ரயில் வந்து கொண்டு இருந்தது.
அந்த சமயத்தில் ரயிலின் வேகம் குறைந்ததும் அன்சாரி போலீசாரை தள்ளி விட்டு ரயிலில் இருந்து குதித்து ஓடினார். அதிர்ச்சி அடைந்த போலீசாரும் ரயிலில் இருந்து இறங்கி அன்சாரியை துரத்திச் சென்றனர்.
ஆனால் அதற்குள் அவர் தப்பி விட்டார். இதுகுறித்து கர்நாடகா மற்றும் தமிழக போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

