/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதுப்பித்த சாலை 'பார்க்கிங்' பகுதியானது வாகன ஓட்டுநர்கள் திணறல்
/
புதுப்பித்த சாலை 'பார்க்கிங்' பகுதியானது வாகன ஓட்டுநர்கள் திணறல்
புதுப்பித்த சாலை 'பார்க்கிங்' பகுதியானது வாகன ஓட்டுநர்கள் திணறல்
புதுப்பித்த சாலை 'பார்க்கிங்' பகுதியானது வாகன ஓட்டுநர்கள் திணறல்
ADDED : மார் 25, 2024 12:10 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி பகுதியில், புதுப்பிக்கப்பட்ட சாலை, வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியது.
பொள்ளாச்சியில் இருந்து, சமத்துார் வரையிலான, 5.5 கி.மீ., துாரம் கொண்ட நெடுஞ்சாலை, கடந்தாண்டு, மழைநீர் வடிகாலை உள்ளடக்கி, 4.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இதற்காக, பல இடங்களில், சாலை அருகே இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்ற கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சூளேஸ்வரன்பட்டியில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், மீண்டும் சாலையையொட்டி, ஆக்கிரமிப்பு கடைகள் பெருகி, சீரான போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம், தங்கம் தியேட்டர் பகுதி முதல் சூளேஸ்வரன்பட்டி வரை, திடீரென தார் சாலை புதுப்பிக்கப்பட்டது. தற்போது, சாலையின் ஒருபகுதி அங்குள்ள உணவகங்களுக்கு வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
கோட்டூர் ரோடு பஸ் ஸ்டாப் முதல், சூளேஸ்வரன்பட்டி வரையிலான சாலை, ஏற்கனவே விரிவுபடுத்தப்பட்டு சென்டர்மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் ஒருபுறம், ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் செல்ல முடியும். ஆனால், சாலையோர கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்திச் செல்வதால், போக்குவரத்து தடைபடுகிறது. சிலர், சாலையின் ஒரு பகுதியை நிரந்தர 'பார்க்கிங்' பகுதியாக மாற்றி வருகின்றனர்.
இத்தகைய விதிமீறலைக் கண்டறிந்து தடுக்க துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை வரையிலான கடைகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இதேபோல, பேரூராட்சி அலுவலக சாலையை ஒட்டிய பகுதியில் நிரந்தமாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

