/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓடிக்கொண்டிருந்த ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
/
ஓடிக்கொண்டிருந்த ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
ஓடிக்கொண்டிருந்த ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
ஓடிக்கொண்டிருந்த ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
ADDED : மார் 07, 2025 10:47 PM

கோவை; சாலையில் ஓடிக்கொண்டிருந்த ஸ்கூட்டர், திடீரென தீப்பிடித்து எரிந்ததால், வாகன ஓட்டி கீழே குதித்து தப்பினார்.
கோவை பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். தினமும் காலை பூசாரிபாளையத்தில் இருந்து, தனது ஸ்கூட்டரில் அலுவலகம் செல்வது வழக்கம்.
நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு, வ.உ.சி., மைதானம் அருகில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென ஸ்கூட்டரில் இருந்து ஒரு சத்தம் கேட்டுள்ளது. ராஜ்குமார் திரும்பி பார்த்த போது, பெட்ரோல் டேங்க் அருகில், தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப் பார்த்த அவர், ஸ்கூட்டரில் இருந்து கீழே குதித்தார். ஸ்கூட்டர் சாலையில் விழுந்தது.
சாலையில் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிவதை பார்த்த அப்பகுதியினர் மண், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.