/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரைகுறையான நிலையில் நிற்கும் ரோடு; பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
அரைகுறையான நிலையில் நிற்கும் ரோடு; பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தல்
அரைகுறையான நிலையில் நிற்கும் ரோடு; பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தல்
அரைகுறையான நிலையில் நிற்கும் ரோடு; பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 05, 2024 08:55 PM
உடுமலை: உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில், அரைகுறையான நிலையில் இருக்கும் ரோடு போடும் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில், பெரும்பாலான ரோடுகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன.
இதில் செல்லும், பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன.
இந்நிலையில்,உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட, 38 ஊராட்சிகளிலும், 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ்சிதிலமடைந்த ரோடுகள் சீரமைப்பு, புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பெரியகோட்டை, கணக்கம்பாளையம் ஊராட்சிகளிலும் புதிய தார்ரோடு அமைப்பதற்கான பணிகள் ஒரு மாதத்திற்கும் முன்பாக துவக்கப்பட்டது.
ஏற்கனவே ஓரளவு இந்த ரோட்டை முழுவதுமாக பெயர்த்து ஜல்லி கற்கள் கொட்டப்பட்டும், மண் போட்டு சமன்படுத்தப்பட்ட நிலையிலும் உள்ளது.
ஒரு மாதமாகியும் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படாமல், அரைகுறையான நிலையில்தான் ஊராட்சி ரோடுகளின் நிலை உள்ளது.
தேர்தலுக்கு முன்பாக ரோடு போடுவதற்கான பணிகள் துவக்கப்பட்டது. இருப்பினும் தாமதமானதால், அப்பகுதி குடியிருப்பு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ரோடுபோடும் பணிகளால், கார் உள்ளிட்ட வாகனங்கள் அந்த பகுதியை பயன்படுத்தமுடிவதில்லை.
வயதான முதியவர்கள், வீட்டிலிருந்து வெளியில் நடப்பதற்கும் இயலாத வகையில் தற்போதைய ரோடு உள்ளது.
பருவமழை அவ்வப்போது பரவலாக பெய்வதால், ரோட்டின் நிலை மேலும் மோசமாகிறது.பாதியில் நிற்கும் தார்சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி, விரைவில் புதிய ரோடு போடுவதற்கு, ஒன்றிய நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

