/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற மாணவி
/
உலக சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற மாணவி
ADDED : செப் 10, 2024 01:12 AM

கோவை:உலக சிலம்பம் பெடரேஷன் சார்பில், உலக அளவிலான சிலம்பப்போட்டி, திருவனந்தபுரம் ஜிம்மி சார்ஜ் ஸ்டேடியத்தில் சமீபத்தில் நடந்தது.
இந்த போட்டியில் இலங்கை, சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, சிலம்ப வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த, நிர்மலமாதா பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி சங்கவி பங்கேற்று, 'டபுள் ஸ்டிக்' சிலம்பப்போட்டியில் தங்க பதக்கமும், சிலம்பச்சண்டையில் வெங்கல பதக்கமும் வென்றுள்ளார்.
சங்கவியிடம் பேசியபோது, ''நான் சிலம்ப ஆசிரியர் பிரியதர்ஷினியிடம், சிலம்பப் பயிற்சி பெற்று வருகிறேன். மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடந்த சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற்றதால், உலக அளவில் நடந்த போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதில் 'டபுள் ஸ்டிக்' சிலம்பத்தில் தங்கப்பதக்கமும், சிலம்பச்சண்டையில் வெங்கலப்பதக்கமும் பெற்று இருக்கிறேன். சிலம்பத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் நன்றாக கற்று சிறந்த சிலம்ப ஆசிரியராக வர விரும்புகிறேன். இந்த தற்காப்பு கலையை, பெண்களுக்கு கற்றுக்கொடுக்க விருப்பமாக இருக்கிறேன்,'' என்றார்.