/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் கல்லுாரியில் வியக்க வைத்த 'பேஷன் பரேடு'
/
மகளிர் கல்லுாரியில் வியக்க வைத்த 'பேஷன் பரேடு'
ADDED : மார் 02, 2025 04:33 AM

பீளமேடு பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியில், கல்லுாரியின் ஆடை மற்றும் அலங்கார வடிவமைப்புத் துறை, மாணவர்களின் படைப்பாற்றலையும், திறமையையும் வெளிப்படுத்தும் வகையில், இவான்ஸா' -என்ற ஆடை அலங்கார நிகழ்ச்சி நடந்தது.
முதல் நாளில், துறையின் முதலாமாண்டு மாணவியரின் கைவண்ணத்தில் உருவான ஆடை அலங்காரங்களை, குட்டீஸ்க்கு அணிவித்து மேடையேற்றியது, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. பின், இரண்டாம் ஆண்டு, மூன்றாமாண்டு மாணவியர் வடிவமைத்த வித்தியாசமான ஆடைகளை, மாணவியர் அணிந்து வந்தனர்.
நேற்று, மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்கெட்ச் ஸ்பிளாஷ்' எனும் தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிக்கு, சித்ரசேனா மிதுலா ஆர்ட் ஸ்டுடியோவின் நிறுவனர் மிதுலா, மாடல் பெரோஜ் ஆகியோரும், ராப் வொண்டர்' பிரிவுக்கு, முன்னாள் மாணவியும் தயான் இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் டிசைனின் நிறுவனருமான தர்ஷினி, முன்னாள் மாணவி மற்றும் நிரா டிசைனர் ஸ்டுடியோவின் நிறுவனர் ஸ்வாதிகா ஆகியோரும், ஆடை அணிவகுப்பிற்கு, ஹவுஸ் ஆப் நதியாவின் நிறுவனர் சுப்ரியா மனோகரன், பிரபல ஸ்டைலிஸ்ட் மற்றும் வடிவமைப்பாளர் மோனிகா நாகராஜன் ஆகியோரும், நடுவர்களாக இருந்தனர்.
சிறப்பு விருந்தினராக, கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின், ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறை இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் ரம்யா பங்கேற்றார்.
ஆடை மற்றும் அலங்கார வடிவமைப்புத் துறையின் டீன்' சாந்தி, பங்கேற்றவர்களை வாழ்த்தினார். ஆடை அணிவகுப்புக்குப் பின் வெற்றியாளர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.