/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்த வாலிபர் பலி
/
போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்த வாலிபர் பலி
ADDED : மார் 29, 2024 12:20 AM

பாலக்காடு;பாலக்காடு, ஆலத்துார் போலீஸ் ஸ்டேஷன் முன், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், காவச்சேரி பத்தனாபுரத்தை சேர்நதவர் ராஜேஷ், 30, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர், தொந்தரவு செய்வதாக கூறி பெண் ஒருவர், ஆலத்துார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த, 24ம் தேதி மதியம் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து, போலீசார் விசாரித்தனர். அதன்பின், ராஜேஷ் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி போலீஸ் ஸ்டேஷன் முன், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட, அப்பகுதி மக்களும் போலீசாரும், திருச்சூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், 90 சதவீதம் தீக்காயமடைந்த ராஜேஷ், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

