/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிச்சை எடுக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
/
பிச்சை எடுக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
பிச்சை எடுக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
பிச்சை எடுக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
ADDED : ஏப் 11, 2024 04:53 AM
கோவை : துாய்மை பணியாளர்கள் நடத்தவிருந்த, பிச்சை எடுக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 50, 60வது வார்டுகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் இருவருக்கு, கடந்த மார்ச் மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கவில்லை எனக்கூறி, மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், பாதிக்கப்பட்டவர்கள் நேற்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த இருந்தனர்.
இதற்கு, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.