/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுார் அருகே ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
/
அன்னுார் அருகே ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
அன்னுார் அருகே ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
அன்னுார் அருகே ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
ADDED : ஏப் 01, 2024 01:24 AM

அன்னூர்:அன்னூர் அருகே துணி ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நூல் மற்றும் டவல்கள் எரிந்து நாசமாகின.
அன்னூரில், சிறுமுகை சாலையில், பூலுவபாளையத்தில், சாரதா டெரி பிராடக்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான அன்னூர் காட்டன் மில், 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மில்லின் தென்மேற்கு பகுதியில் உள்ள குடோனில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நூல் பண்டல்கள், டெரி டவல்கள், சோலார் பேனல்கள், மின் கன்ட்ரோல் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று மாலை அங்கு திடீரென தீ பிடித்தது. வேகமாக பரவி 100 அடி உயரத்துக்கு எரிந்தது.
அன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கணபதி மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள், அருகில் உள்ள பொதுமக்கள், பல மணி நேரம் போராடினர்.
எனினும், தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். அருகில் உள்ள ஸ்பின்னிங் மில்களிலிருந்தும், டேங்கர் வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
தீயின் வெப்பம் தாங்காமல் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரிக்கின்றனர்.

