/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சியை பசுமையாக்க ஆயிரம் வேப்ப மரக்கன்றுகள்
/
ஊராட்சியை பசுமையாக்க ஆயிரம் வேப்ப மரக்கன்றுகள்
ADDED : செப் 04, 2024 11:22 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கோதவாடியில் நீரோடை, குளம் மற்றும் ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் இடங்களில், நிழல் மற்றும் பழம் தரும் மரங்கள் ஊராட்சி சார்பில் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் பழ வகை மரங்களான நெல்லி, கொய்யா, மா போன்றவைகள் வழங்கப்பட்டது. தற்போது ஆயிரம் வேப்ப மரக்கன்றுகள் ஊராட்சியின் பல பகுதிகளில் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'ஊராட்சியில் காலி இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வேப்ப மரக்கன்றுகள் நடவு செய்ய தயார் நிலையில் உள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆங்காங்கே நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்றம் செய்ய உள்ளோம்,' என்றனர்.