ADDED : மே 10, 2024 02:00 AM

கோவை:கோடை மழை பெய்ததால், கோவையின் பல்வேறு பகுதிகளும் குளிர்ந்தன. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வெய்யிலின் தாக்கம் அதிகம் இருந்தது. கோவையிலும் வரலாறு காணாத வகையில் வெய்யில் அதிகளவு வாட்டி எடுத்தது.
அனைத்து தரப்பினரும், கோடை மழையை எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் கோவை உட்பட பல்வேறு பகுதிகளிலும், மழைப் பொழிவு இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதேபோல், கோவையில் நேற்று முன்தினம் இரவு, பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பொழிந்தது. நேற்று காலையிலும் ஒரு சில பகுதிகளில் துாறல் இருந்தது.
நேற்று மாலை, 6:00 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யத் துவங்கியது.
காந்திபுரம், கணபதி, பீளமேடு, சிங்காநல்லுார், ராமநாதபுரம், ஒப்பணக்கார வீதி, சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், மிதமான மழைப்பொழிவு இருந்தது.
வெய்யிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பெய்த இம்மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நகரம் குளிர்ந்தது.