/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டு முறை ஓட்டு போட முயன்ற தொழிலாளி கைது
/
இரண்டு முறை ஓட்டு போட முயன்ற தொழிலாளி கைது
ADDED : ஏப் 21, 2024 01:24 AM
கோவை:கோவை கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப்பதிவில் வரிசையில் நின்றிருந்த ஒரு நபரின் கையில் மை வைக்க அலுவலர் அவரது விரலை காண்பிக்குமாறு கூறினார்.
அப்போது அவர் கையை பார்த்தபோது ஏற்கனவே ஓட்டு அளித்ததற்கான அடையாள மை வைக்கப்பட்டிருந்தது. ஓட்டுச்சாவடி அலுவலர் லதா மகேஸ்வரி உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார்.
விசாரணையில் அவர் நல்லாம்பாளையத்தை சேர்ந்த லேத் தொழிலாளி திருநாவுக்கரசு 52, என்பதும், அவருக்கு காந்திபுரம் மற்றும் நல்லாம்பாளையம் என இரு இடங்களில் ஓட்டு இருந்ததும் தெரிந்தது.
அவர் காந்திபுரத்தில் ஓட்டளித்து விட்டு மீண்டும் இரண்டாவது ஓட்டு போட நல்லாம்பாளையம் வந்ததும் தெரிய வந்தது. கவுண்டம்பாளையம் போலீசார் திருநாவுக்கரசை கைது செய்தனர்.

