/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களிடம் சில்மிஷம் செய்து தப்பிய வாலிபர் கை முறிந்தது
/
பெண்களிடம் சில்மிஷம் செய்து தப்பிய வாலிபர் கை முறிந்தது
பெண்களிடம் சில்மிஷம் செய்து தப்பிய வாலிபர் கை முறிந்தது
பெண்களிடம் சில்மிஷம் செய்து தப்பிய வாலிபர் கை முறிந்தது
ADDED : நவ 05, 2024 04:14 AM

கோவை: கோவையைச் சேர்ந்த, 43 வயது பெண், நேற்று முன்தினம் அதிகாலை, தனது 53 வயது தோழியுடன் சைக்கிளிங் சென்று கொண்டு இருந்தார். கோவை-அவிநாசி ரோடு மேம்பாலத்தில் சென்றபோது, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
பின், அங்கிருந்து சென்ற அவர், மீண்டும் அவிநாசி ரோடு அண்ணாசிலை அருகே சென்றபோது, 53 வயது பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். இரு பெண்களும் அவரிடமிருந்து தப்ப, சைக்கிளில் வேகமாக சென்றனர். ஆனால், அவர்களைத் துரத்திச் சென்ற வாலிபர் ஆபாச செய்கைகளைக் காண்பித்து, தப்பிச் சென்றார்.
பெண்கள் இருவரும் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார், ஏ.என்.பி.ஆர்., கேமராக்களின் உதவியுடன், அந்த வாலிபரின் பைக் பதிவு எண்ணை கண்டுபிடித்து, அவரைக் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: ஈரோட்டை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி கவின், 25, கோவை ஆவாரம்பாளையம் கவிராஜ் டாக்டர் தோட்டம் பகுதியில் தங்கி இருந்து, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம், ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் பெண்கள் வருவதை பார்த்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். புகாரின்பேரில், கேமராவைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில், கவின் கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்வது தெரிந்தது. அங்கு சென்று கவினைக் கைது செய்தோம். பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, பைக்கில் வேகமாக தப்பிச் சென்றபோது கவின் தவறி விழுந்து கை முறிந்திருக்கிறது. அதற்காக சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, கைது செய்து, சிறையில் அடைத்தோம்.
இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.