/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
/
ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : ஆக 03, 2024 05:34 AM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், சின்னதடாகம் வட்டாரங்களில் ஆடி வெள்ளியை ஒட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன.
துடியலுார் ஐ.டி.ஐ., பின்புறம் உள்ள கருமாரியம்மன் கோவிலில் தங்க காப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நரசிம்மநாயக்கன்பாளையம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளியை ஒட்டி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நரசிம்மநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவிலில் அம்மன் மஞ்சள் கயிறு அலங்காரத்தில் அருள் பாலித்தார். நிகழ்ச்சியை ஒட்டி அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
ஜோதிபுரம் தண்டு மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை ஒட்டி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பூஜைகள் நடந்தன.
பெரியநாயக்கன்பாளையம் சந்தைப்பேட்டை மகாமாரியம்மன் ஆடி வெள்ளியை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதே போல பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், தடாகம் வட்டாரங்களில் உள்ள பல்வேறு அம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.