ADDED : மே 31, 2026 05:40 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நள்ளிரவில், ஆவின் பால் வேன் கவிழ்ந்து விபத்துள்ளானது.
நேற்று நள்ளிரவு, பேரூர் பச்சாபாளையத்திலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி பால் ஏற்றிக்கொண்டு, ஆவின் வேன் பயணித்தது. பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ., பிரிவு அருகே, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. ஓட்டுநர் செந்தில்குமார், 50, அதிஷ்டவசமாக தப்பினார். அக்கம் பக்கத்தினர் வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சீர்படுத்தினர். ஐந்து பெட்டிகளில் இருந்த பால் பாக்கெட்டுகள் வீணானது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
