/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அப்பாடா... ஒருவழியாக தேர்தல் பிரசாரம் நிறைவு!
/
அப்பாடா... ஒருவழியாக தேர்தல் பிரசாரம் நிறைவு!
ADDED : ஏப் 18, 2024 12:23 AM

கோவை : கோவையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், நேற்று மாலையுடன் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
லோக்சபா தேர்தல் நாளை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாக, அனல் கக்கும் வெயிலில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை முதல், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதால், அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
நேற்று மாலை மசக்காளிபாளையம் பாலன் நகரில், தனது பிரசாரத்தை மாலை, 6:00 மணிக்கு நிறைவு செய்தார். அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உடனிருந்தார்.
தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், சிவானந்தா காலனியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். அவருக்கு ஆதரவாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அ.தி.மு.க., வேட்பாளர் ராமசந்திரன் சிங்காநல்லுார் செல்லாண்டி அம்மன் கோவில் அருகே பிரசாரத்தை நிறைவு செய்தார். முன்னாள் அமைச்சர் வேலுமணி, வேட்பாளருடன் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன், மருதமலை அடிவாரத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். பிரசாரம் முடிந்த பின், தனது பிரசாரத்துக்காக உதவிய கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

