ADDED : ஜூலை 29, 2024 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்;இருகூர் கலாம் கனவுகள் அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், ஒன்பதாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நிர்வாகிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினர்.
தலைவர் தனபால், பொருளாளர் ஆனந்தி,மகாலட்சுமி, நாகராஜ் உட் பட பலர் பங்கேற்றனர். முதலிபாளையம் எம்.என்.சி., பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர் கலாம் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முதல்வர் பிந்து சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.