/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அபிராமி' மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி
/
'அபிராமி' மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி
ADDED : ஆக 19, 2024 10:55 PM

கோவை:ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களில் முதலாமாண்டு மாணவர்களுக்கான, பிரஷ்மென் இண்டக்ஷன் நிகழ்வு, அவர்களின் கல்விப்பாதைக்கு அடித்தளமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு, ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தில், பாராமெடிக்கல் படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சிக்கு, அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசுவாமி தலைமை வகித்தார்.
சின்னத்திரை பிரபலம் ஈரோடு மகேஷ் பங்கேற்று, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தன்னம்பிக்கை உரையாற்றினார்.
அபிராமி கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் டாக்டர்கள் குந்தவிதேவி, செந்தில்குமார், பாலமுருகன், உமாதேவி, சுசரிதா மற்றும் கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.