/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருக்கலைப்பு மாத்திரைகள் விதிகளை மீறி விற்க கூடாது
/
கருக்கலைப்பு மாத்திரைகள் விதிகளை மீறி விற்க கூடாது
கருக்கலைப்பு மாத்திரைகள் விதிகளை மீறி விற்க கூடாது
கருக்கலைப்பு மாத்திரைகள் விதிகளை மீறி விற்க கூடாது
ADDED : மார் 01, 2025 05:48 AM

சோமனுார்; கோவை, திருப்பூர் மாவட்ட குடும்ப நல செயலகம், மருந்து கட்டுப்பாட்டுத் துறை சார்பில், கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் சோமனுார் அருகே நடந்தது.
துணை இயக்குனர் கவுரி பேசியதாவது:
டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இன்றி கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது. விதிகளை மீறி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், மருந்து கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வழக்கு தொடரப்பட்டு, அபராதம் மற்றும் சிறை தண்டணை கிடைக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசாணையை மீறி மாத்திரைகளை விற்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கருக்கலைப்பு செய்யப்படுகிறது. அதை பயன்படுத்தி கொள்ளும் பெண்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
வட்டார மருத்துவ அலுவலர் சுடர் விழி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர்கள் ராணி, சார்லஸ், மருந்தாளுனர்கள் ராமசாமி, பிரகாஷ் மற்றும் மருந்து வணிகர்கள் பங்கேற்றனர்.