ADDED : ஜூலை 19, 2024 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்':மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த, 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரைச்சாவடி தடுப்பணை, சாடிவயல் சின்னாறு ஆகிய இடங்களில் அதிக அளவு பொதுமக்கள் தண்ணீரில் இறங்குவதால், போலீசார் அவர்களை விரட்டினர். இதனையடுத்து, அப்பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.