/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குவிந்து கிடக்கும் மின்னணு கழிவுகள்
/
குவிந்து கிடக்கும் மின்னணு கழிவுகள்
ADDED : ஆக 20, 2024 02:28 AM

பொள்ளாச்சி;கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில், குவிந்து கிடக்கும் மின்னணு கழிவுகளை, அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மக்கும் குப்பை, மக்காதது, 'இ- - வேஸ்ட்' என தினமும், பல நுாறு கிலோ குப்பை சேகரமாகிறது. இதில், பேட்டரி, ரிமோட், மின் விளக்கு, பென் டிரைவ், ஒயர்கள், பழுதான மொபைல் மற்றும் மின்னணு சாதனங்களும் சேகரமாகின்றன.
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 பிரிவு, 31ன் கீழ் இக்கழிவுகளை மக்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் முறையாக பிரித்து வழங்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
அவ்வாறு, இருந்தும் பேரூராட்சி அலுவலகத்திற்கு உள்ளேயே, வார்டுகளில் மீதமான டியூப்லைட்கள், ஒயர்கள் உள்ளிட்ட மின்னணு கழிவுகள் குவிந்து கிடப்பது, அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மின்னணு கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்,' என்றனர்.

