/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாச்சியார் வித்யாலயம் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
நாச்சியார் வித்யாலயம் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
நாச்சியார் வித்யாலயம் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
நாச்சியார் வித்யாலயம் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 10, 2024 11:13 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள நாச்சியார் வித்யாலயம் பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. பள்ளி மாணவியர் தீபிகா, அனுநயா, ஷர்மிதா ஆகியோர், 500க்கு, 494 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர்.
மாணவி சாதனா, 491 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவர் சாய் வெங்கட், மாணவி ஷிவானி ஆகியோர், 490 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாமிடம் பிடித்தனர். 13 மாணவர்கள், கணித பாடத்தில், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
அறிவியல் பாடத்தில், மூன்று மாணவர்கள், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றனர். பள்ளியானது, கடந்த, 14 ஆண்டுகளாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது.
சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளியின் நிறுவனர் சின்னசாமி பாராட்டி, பரிசுகள் வழங்கினார். தாளாளர் மணி, பள்ளி முதல்வர் விஜயலட்சுமி ஆகியோர் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.