/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை
/
விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை
விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை
விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை
ADDED : ஏப் 13, 2024 12:15 AM
கோவை;பிளஸ் 1 வகுப்பு முடித்து பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிளஸ் 2 வகுப்புக்கு மே 6ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மே 10 ம் தேதியும், பிளஸ் 1க்கு மே 14 ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
பொதுத் தேர்வு முடிந்து மாணவர்கள், விடுமுறையில் உள்ளனர். விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 முடித்து பிளஸ் 2 வகுப்புச் செல்லும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது. சில பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு வகுப்பு எடுப்பது குறித்து தகவல் கிடைத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

