/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விலங்குகளின் விடுதலைக்காக செயல்பாட்டாளர்கள் போராட்டம்
/
விலங்குகளின் விடுதலைக்காக செயல்பாட்டாளர்கள் போராட்டம்
விலங்குகளின் விடுதலைக்காக செயல்பாட்டாளர்கள் போராட்டம்
விலங்குகளின் விடுதலைக்காக செயல்பாட்டாளர்கள் போராட்டம்
ADDED : ஆக 26, 2024 01:45 AM

கோவை;அடிமைப்படுத்தப்பட்டு, கொடூரமாக நடத்தப்படும் அனைத்து விலங்குகளின் விடுதலைக்காக, விலங்குரிமை கள செயல்பாட்டாளர்கள், போராட்டம் நடத்தினர்.
'கூண்டுக்குள் அடைக்கப்படும் விலங்குகள் மிகுந்த துயரத்தை அனுபவித்து வருகின்றன. மனிதர்களால் பல விலங்குகள் கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றன. கோழி வளர்ப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் வேதி பொருட்களால், அந்த கோழி இறைச்சியை உட்கொள்ளும் போது, மனிதர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன' எனக்கூறி, அடிமைப்படுத்தப்பட்டு கொடூரமாக நடத்தப்படும் விலங்குகளின் விடுதலைக்காக, தமிழகம் முழுவதும் உள்ள விலங்குரிமை கள செயல்பாட்டாளர்கள், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், போராட்டம் நடத்தினர்.
கள செயல்பாட்டாளர்கள், விலங்கு பண்ணைகள் நடைமுறை தெரிவிக்கும் வகையில், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியிருந்தனர். விலங்குகளின் நிலையை உணர்ந்து கொள்ள, ஒரு கள செயல்பாட்டாளர், கூண்டில் அடைக்கப்பட்டு அமர்ந்திருந்தார். பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இவர்கள் வலியுறுத்தினர்.