/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 5 கம்பெனி துணை ராணுவ படை
/
லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 5 கம்பெனி துணை ராணுவ படை
லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 5 கம்பெனி துணை ராணுவ படை
லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 5 கம்பெனி துணை ராணுவ படை
ADDED : மார் 28, 2024 10:39 PM
பொள்ளாச்சி:கோவைக்கு மேலும், 5 கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர்.
லோக்சபா தேர்தல் வரும், ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி சட்டம்,- ஒழுங்கு கண்காணிப்புக்காகவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், துணை ராணுவ படையினரை, மத்திய உள்துறை தமிழகத்துக்கு அனுப்பியது. முதல்கட்டமாக தமிழகத்துக்கு, துணை ராணுவ படையினர்அனுப்பப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து, 3 கம்பெனி மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் கடந்த, 1-ம் தேதி ரயில் மூலம் கோவை வந்தனர். ஒரு கம்பெனியில் 92 பேர் என மொத்தம் 276 பேர் வந்துள்ளனர்.
கோவை மாநகர், மற்றும் புறநகர், சேலம் மாநகர் ஆகிய இடங்களுக்கு தலா ஒரு கம்பெனி துணை ராணுவ படையினர் பிரித்து அனுப்பப்பட்டனர்.மீதமுள்ளவர்கள்,தற்போது கோவை, பொள்ளாச்சி தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக, குனியமுத்துார் இடையர்பாளையம் உட்பட, பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அமைதியாக வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் துணை ராணுவத்தினர் புறநகர் பகுதியில், கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக கோவைக்கு மேலும், 5 கம்பெனி துணை ராணுவ படையினர் அடுத்த வாரம் வர உள்ளனர்.
துணை ராணுவ படை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில், லோக்சபா தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக, 276 பேர் கொண்ட, 3 கம்பெனி ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்களில், 2 கம்பெனி கோவை மாநகர்மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பாதுகாப்பை மேலும் அதிகரிக்க கோவைக்கு கூடுதலாக, 5 கம்பெனி துணை ராணுவ படையினர் சில நாட்களில் வருகைதர உள்ளனர்' என்றார்.

