/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.டி.ஓ.,வுக்கு கூடுதல் கலெக்டர் மெமோ; பணியில் மெத்தனம் என புகார்
/
பி.டி.ஓ.,வுக்கு கூடுதல் கலெக்டர் மெமோ; பணியில் மெத்தனம் என புகார்
பி.டி.ஓ.,வுக்கு கூடுதல் கலெக்டர் மெமோ; பணியில் மெத்தனம் என புகார்
பி.டி.ஓ.,வுக்கு கூடுதல் கலெக்டர் மெமோ; பணியில் மெத்தனம் என புகார்
ADDED : ஆக 29, 2024 10:30 PM
அன்னுார்: வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தில் மெத்தனமாக இருந்ததாக அன்னுார் பி.டி.ஓ.,வுக்கு கூடுதல் கலெக்டர் மெமோ அனுப்பியுள்ளார்.
தமிழக அரசு இரண்டு ஆண்டுகளில் 2.5 லட்சம் வீடுகளை பழுதுபார்க்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
ஓட்டு வீடுகள் பழுது பார்க்க, அன்னுார் ஒன்றியத்திற்கு சிறுபழுதுக்கு 103, பெரிய பழுதுக்கு 156 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாய் தள வீடுகளில் சிறிய பழுதுக்கு 211, பெரிய பழுதுக்கு 203 வீடுகள் பழுது பார்க்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை ஓட்டு வீடுகளில் அன்னுார் ஒன்றியத்தில் சிறுபழுது பார்க்க ஒரு முன்மொழிவு கூட பெறப்படவில்லை. பெரும் பழுது பார்க்க 36 வீடுகளுக்கு மட்டும் முன்மொழிவு பெறப்பட்டுள்ளது.
சாய்தளவீடுகளில் சிறு பழுதுபார்க்க 98, பெரிய பழுதுபார்க்க 71 வீடுகளுக்கு முன்மொழிவு பெறப்பட்டுள்ளது. ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள வீடுகளில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட மிக குறைவாக முன்மொழிவு பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், அன்னுார் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) உமா சங்கரிக்கு அனுப்பியுள்ள மெமோவில், அரசு திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த தடையாகவும், மிகவும் மெத்தனப் போக்கில் செயல்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
எனவே மேற்படி குறைபாட்டிற்காக உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது, என்பதற்கான விளக்கத்தை இந்த குறிப்பாணை பெறப்பட்ட மூன்று தினங்களுக்குள் அன்னுார் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) விளக்கம் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கூறிக்கொள்ள ஏதும் இல்லை என கருதி மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு மெமோவில் தெரிவித்துள்ளார்.