/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார் சேவைக்கு கூடுதல் கவுன்டர்
/
ஆதார் சேவைக்கு கூடுதல் கவுன்டர்
ADDED : ஏப் 09, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோடை விடுமுறை காரணமாக, கோவை தலைமை அஞ்சல் நிலையத்தில், ஆதார் சேவைக்கு கூடுதல் கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளிகள் விடுமுறை காலம் என்பதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கோவை தலைமை அஞ்சலகத்தில் மூன்று கவுன்டர் ஆக செயல்பட்டு வந்த ஆதார் சேவை, நான்காக உயர்த்தப்பட்டுள்ளது.
இங்கு, காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை, ஆதார் சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 0422 - 2300014 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

