/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம்
/
விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம்
விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம்
விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம்
ADDED : மே 02, 2024 11:02 PM
சூலுார்;விதைப்பண்ணைகள் அமைத்தால், விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும், என, கலெக்டரின் நேர்முக உதவியாளர்( வேளாண்மை) மல்லிகா கூறினார்.
சூலுார் வட்டாரத்தில் கொள்ளுப் பாளையம், நடுப்பாளையம், கண்ணம்பாளையம் பகுதிகளில் சோள விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. விதைப்பண்ணைகள் மற்றும் கோடையில் சாகுபடி செய்யப்பட்ட வயல்களை கலெக்டரின் நேர்முக உதவியாளர்( வேளாண்மை) மல்லிகா ஆய்வு செய்தார்.
கோ 32 மற்றும் கே 12 ஆகிய சோள ரகங்கள் தானியமாகவும், தீவனமாகவும் பயன்படக்கூடியது. கால்நடைகள் இந்த சோள தட்டுகளை விரும்பி உண்ணும். இதனால், பால் உற்பத்தி அதிகமாகும். விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.
தரமான விதை உற்பத்தி செய்ய ஆலோசனைகள் வழங்கப்படும். விதைகளை வேளாண் துறையே கொள்முதல் செய்து கொள்ளும். அதனால், விதைப்பண்ணைகள் அமைக்க அனைவரும் முன் வரவேண்டும், என, அவர் விவசாயிகளிடம் கூறினார்.
வேளாண் உதவி இயக்குனர் கண்ணாமணி, துணை வேளாண் அலுவலர் செந்தில், உதவி விதை அலுவலர்கள் செல்வராஜ், பெரிய கருப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.