தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கிடைத்தது கூடுதல் அவகாசம்

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கிடைத்தது கூடுதல் அவகாசம்

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கிடைத்தது கூடுதல் அவகாசம்


ADDED : மே 31, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பாரதியார் பல்கலையில் இளநிலை, முதுநிலை மற்றும்  முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 15ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்சி., இயற்பியல்,வேதியியல் மற்றும் உயிர் அறிவியல், எம்.எஸ்.சி., சுற்றுப்புறச்சூழல் அறிவியல் மற்றும் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு எம்.ஏ., தமிழ், மொழியியல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய படிப்புகளுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இந்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்சி., வேதியல் படிப்புகளுக்கான நுழைவுதேர்வு ஜூன் 5ல் வேதியியல் துறையில் காலை 11 மணிக்கு தேர்வு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகள் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஜூன் 4ம் தேதி வரை அனுமதிச் சீட்டு கிடைக்காதவர்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரடியாக தேர்வில் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 0422- 2428318 என்ற எண்ணில்  தொடர்புகொள்ளலாம் என பல்கலை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us