/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் கோலாகலம்
/
ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் கோலாகலம்
ADDED : ஆக 16, 2024 08:25 PM
அன்னூர்;அன்னூர் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
பழமையான கெம்பநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவிலில் நேற்று பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் மாரியம்மனுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
பதுவம்பள்ளி வீரமாத்தி அம்மன் கோவிலில், நேற்று மதியம் ரோஜா மாலை அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், அருந்தவ செல்வி அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. உபகோவிலான பெரிய அம்மன் மற்றும் சின்னம்மன் கோவில்களில், அலங்கார பூஜை, அபிஷேக பூஜை, திருவிளக்கு வழிபாடு நடந்தது.
கஞ்சப்பள்ளி அங்காளம்மன் கோவிலில், அங்காளம்மன் 24 வகை காய், கனிகளால் அலங்கரிக்கப்பட்டு அருள் பாலித்தார்.
அன்னூர் மாரியம்மன் கோவில், குன்னத்தூராம்பாளையம் மாரியம்மன் கோவில் ஆகியவற்றில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

