ADDED : செப் 05, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சின்னவேடம்பட்டி தொழில்நிறுவனங்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் குழு, தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2024-25ம் ஆண்டுக்கான தலைவராக தேவகுமார், துணைத்தலைவர் ஜெயகுமார், ஆலோசகர் ராதாகிருஷ்ணன், செயலர் கணேசன், இணை செயலர் லோகநாதன், பொருளாளர் பரமசிவம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக, பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் உயர்த்தப்பட்ட, மின்கட்டணத்தை திரும்ப பெறவேண்டும், ஜி.எஸ்.டி., குறித்த பயிற்சி அளித்தல், மானியங்கள் பற்றிய விளக்க கூட்டம் நடத்துதல், சின்னவேடம் பட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.