/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீரான குடிநீர் கிடைக்க அ.தி.மு.க., கோரிக்கை
/
சீரான குடிநீர் கிடைக்க அ.தி.மு.க., கோரிக்கை
ADDED : மே 10, 2024 01:28 AM
கோவை:மாநகராட்சி பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு, அ.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம், அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் நேற்று அளித்த மனுவில், 'கோவை மாநகரின் ஜீவாதாரமாக உள்ள சிறுவாணி, பில்லுார் அணைகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இச்சூழலில், 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில பகுதிகளில் ஏழு நாட்கள், 15 நாட்கள், 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதனை தாங்கள் மேற்பார்வையிட்டு, 100 வார்டு மக்களுக்கும் எவ்வித சிரமமும் இன்றி, குடிநீர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.
புதிய 'போர்வெல்'கள் அமைத்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என தெரிவித்துள்ளார்.