/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அ.தி.மு.க., திட்டங்களை முடக்கிய தி.மு.க.,'
/
'அ.தி.மு.க., திட்டங்களை முடக்கிய தி.மு.க.,'
ADDED : ஏப் 09, 2024 12:45 AM

குன்னுார் அருகே அருவங்காடு பகுதியில் தி.மு.க.,வால் முடக்கப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கான 'லேப்டாப்' குறித்து மக்களுக்கு விளக்கும் வகையில் பிரசாரம் நடந்தது
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், மகளிருக்கு தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு 'லேப்டாப்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டங்கள் முடக்கப்பட்டன.
இதனை முன்வைத்து, மக்களுக்கு விளக்கும் வகையில் நேற்று, குன்னுார் அருகே அருவங்காடு பகுதியில் அ.தி.மு.க.வினர் நுாதன பிரசாரம் மேற்கொண்டனர்.அதில், எம்.ஜி.ஆர்., வேடமணிந்த ஒருவருடன், தாலிக்கு தங்கம் என்ற பேனர்களை மகளிர் கையில் வைத்தும், மாணவர்கள் பெற்ற 'லேப்டாப்'களை ஏந்தியும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இவர்களுடன், நீலகிரி லோக்சபா தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு உட்பட பலர் உடன் சென்று பிரசாரம் செய்தனர்.

