/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுநோயில் இருந்து தப்பிக்க முதியவர்களுக்கு ஆலோசனை
/
புற்றுநோயில் இருந்து தப்பிக்க முதியவர்களுக்கு ஆலோசனை
புற்றுநோயில் இருந்து தப்பிக்க முதியவர்களுக்கு ஆலோசனை
புற்றுநோயில் இருந்து தப்பிக்க முதியவர்களுக்கு ஆலோசனை
ADDED : ஜூலை 21, 2024 12:48 AM

இளமை மறைய துவங்கும் போதே, உடலில் நோய்களும் வரத்துவங்கி விடுகிறது. முதியவர்கள் அனுபவிக்கும் நோய்களில் மிகவும் மோசமானது புற்றுநோய். இதனால் முதியவர்கள் மீதம் உள்ள வாழ்நாளையும் வெறுத்து விடுகின்றனர்.
புற்றுநோயில் இருந்து விடுபடவும், அதில் இருந்து தப்பிக்கவும் ஆலோசனைகளை கூறுகிறார்புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ் வெங்கடாசலம்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
சிறிய வயதினரை காட்டிலும், முதியவர்களை புற்றுநோய் அதிகம் தாக்குகிறது. புற்றுநோய் கிருமியோ, தொற்றோ கிடையாது. மரபணு மாற்றத்தால் வரகூடியது.
உடலில் தவறு நடக்கும் போது டி.என்.ஏ., தடுக்கிறது. அதற்கான புரத சத்து உடலில் உள்ளது.
ஆனால் புகைப்பிடித்தல், மது குடித்தல், குட்கா, ஒழுக்கமில்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் புற்றுநோய் வருகிறது. வயதானவர்களுக்கு தைராய்டு புற்றுநோய், வயிறு புற்றுநோய், ஆசனவாய் புற்றுநோய், பெருக்குடல் புற்றுநோய், கணையம், மார்பகம், கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் புற்று நோய் ஆகியவை, மூலக்கூறு மாற்றத்தால் வருகிறது.
புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால், தடுப்பதற்கு ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்ய வேண்டும். இந்த ஸ்கிரீனிங் டெஸ்ட், தனிப்பட்ட நபரால் செய்ய முடியது. அரசு மற்றும் தன்னார்வலர்களால் தான் செய்ய முடியும்.
அதிலும் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், வாய் புற்றுநோய் ஆகியவற்றிற்கு தான் செய்ய முடியும்.
அதிக புகையிலை பயன்பாட்டால், அதிகமானோருக்கு வாய் புற்றுநோய் வருகிறது.
இந்த ஐந்து வகை புற்றுநோயையும் ஆரம்ப நிலையில் கண்டு பிடித்தால், 100 சதவீதம் குணப்படுத்தலாம்.
சரியான நேரம், சரியான சிகிச்சையினால் புற்றுநோயை குணப்படுத்தி விடலாம். 4வது நிலையில், 5ல் இருந்து, 10 வருடங்கள் வாழ்நாளை நீட்டிக்க முடியும். 5வது நிலையில் எதுவும் செய்ய முடியாது.
புற்றுநோயை குணப்படுத்த புற்றுநோய் அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவ அறுவை சிகிச்சை, கதிர்இயக்க சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
வயதான காலத்தில் புற்றுநோயை தடுக்க மது, புகையிலை, புகைப்பிடிப்பது தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நல்ல துாக்கம், சூரிய வெளிச்சம், நல்ல வேலை செய்வது வாயிலாக, புற்றுநோயில் இருந்து தப்பலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.