/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுக்க வேளாண் பல்கலை அறிவுரை
/
கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுக்க வேளாண் பல்கலை அறிவுரை
கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுக்க வேளாண் பல்கலை அறிவுரை
கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுக்க வேளாண் பல்கலை அறிவுரை
ADDED : ஏப் 11, 2024 12:28 AM
உடுமலை : பண்ணையை முறையாக பராமரித்தால், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் வருவதை தடுக்கலாம் என, கோவை வேளாண் பல்கலையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உடுமலை பகுதியில், புறக்கடை வளர்ப்பு முறையிலும், சிறிய கொட்டகை அமைத்தும் கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், கோழிகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து கோவை வேளாண் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.
வெள்ளை கழிச்சல் நோயை தவிர்க்க, முறையான தடுப்பூசி மற்றும் பண்ணையை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பிற மனிதர்கள், கொட்டகை உள்ளே வராமல் தடுத்தால், ஆழ்கூள முறையில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் இறந்த கோழிகளின் உடலை, உடனே அப்புறப்படுத்தி புதைத்து விடுதல் நன்று. இருவகைத் தடுப்பூசிகள் இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன. ஒன்று குஞ்சுகளிலும் மற்றொன்று வயதான கோழிகளிலும் போடப்படுகிறது.
இத்தடுப்பூசி இந்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. 6 வார வயதான குஞ்சுகளுக்குப் போடப்படும் தடுப்பூசியானது 1லிருந்து 3 வருடங்கள் வரை நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்.
அதிகமான குடற்புழுக்கள் மற்றும் இரத்தக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு தடுப்பு மருந்துகள் பயனளிக்கிறது.
ரத்தக் கழிச்சல், சரியான ஊட்டச்சத்தற்ற, குடற்புழு, பாதிப்புக் கொண்ட கோழிகள் எளிதில் இந்நோய்க்கு உட்படுகிறது.
இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

