/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புளிச்சகீரை பயிர் செய்யலாம் முன்னோடி விவசாயிகள் அறிவுரை
/
புளிச்சகீரை பயிர் செய்யலாம் முன்னோடி விவசாயிகள் அறிவுரை
புளிச்சகீரை பயிர் செய்யலாம் முன்னோடி விவசாயிகள் அறிவுரை
புளிச்சகீரை பயிர் செய்யலாம் முன்னோடி விவசாயிகள் அறிவுரை
ADDED : மார் 04, 2025 12:27 AM
மனிதனுக்கு அதிக அளவு ஆரோக்கியத்தை கொடுக்கும் புளிச்சகீரையை பயிர் செய்ய விவசாயிகள், முன் வர வேண்டுமென, முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறியுள்ளனர்.
சித்திரை, ஆடி, மார்கழி, தையில் புளிச்ச கீரையை பயிர் செய்யலாம். சுவையும், சத்தும் மிகுந்த இந்த கீரை இந்தியா முழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், வெள்ளை, சிவப்பு பூ பூக்கும் ரகம் என இரண்டு வகைகள் உள்ளன. இந்த கீரை வறட்சியை ஓரளவு தாங்கி, வளரும் தன்மை மிக்கது.
அதனால் வெப்பத்தை தாங்கி, பல்வேறு மண் வகைகளில் நன்றாக வளரும். நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்று அமிலத்தன்மை உள்ள நிலம் சாகுபடிக்கு ஏற்றவை. இத்தகைய நிலத்தை இரண்டு முதல் மூன்று முறை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு, 10 டன் தொழு உரம் வீதம் இட்டு, பரப்பி சமப்படுத்த வேண்டும். மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றையும் விடலாம். எக்டருக்கு, 2.5 கிலோ விதைகள் தேவைப்படும். விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். மூன்றாம் நாள் உயிர் நீர் விட வேண்டும். அடுத்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்யலாம்.
களைகளால் கீரை செடிகள் பாதிக்கப்படாமல் இருக்க விதைத்து பத்து முதல், 15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். ஜீவாமிர்த கரைசலை பாசன நீரில் கலந்து விடலாம். இதனால் கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இலைகளில் பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், இஞ்சி, பூண்டு கரைசலை தெளிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சமமாக எடுத்து இடித்து ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தில் கலந்து ஒரு நாள் வைத்திருந்தால் இந்த கரைசல் தயாராகிவிடும்.
தரையிலிருந்து, 5 செ.மீ., உயரம் விட்டு பின்னர் அறுவடை செய்யலாம்.
புளிச்ச கீரையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்த சோகை குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி மிக்க புளிச்சக்கீரை காச நோயை குணமாக்கும். ரத்தத்தை சுத்திகரிப்பதில் புளிச்ச கீரை முதலிடம் வகிக்கிறது என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.