/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழையில் இலை நோய் கட்டுப்படுத்த அறிவுரை
/
வாழையில் இலை நோய் கட்டுப்படுத்த அறிவுரை
ADDED : ஆக 20, 2024 10:20 PM
கிணத்துக்கடவு : வாழை இலையில் மஞ்சள் தன்மை மற்றும் இலை கருகல் நோய்க்கு தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிணத்துக்கடவு பகுதியில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும், நேந்திரன், கதளி, பூவன், ரஸ்தாலி ரக வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் வாழை இலை கருகியும், மஞ்சள் நிறமாகவும் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் கூறுகையில், வாழையில் சாம்பல் சத்து, தழைச்சத்து, நுண்ணூட்டச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்து குறைவால், வாழை இலையில் மஞ்சள் நிறம் மற்றும் கருகல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வாழைக்கு நல்ல சத்தான உரம் அளிக்க வேண்டும்.
முதல் மாதத்தில், சூப்பர் பாஸ்பேட், மக்கிய தொழு உரம் இட வேண்டும். இரண்டாவது மாதத்தில் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உரங்கள் இட வேண்டும். இதே போன்று வாழை நுண்ணூட்டமான 'வாழை சக்தி' கொடுக்க வேண்டும். இவ்வாறு, உர மேலாண்மையை கடைபிடித்தால் இலை கருகல் மற்றும் மஞ்சள் நோய் ஏற்படுவதை தடுக்க முடியும், என்றார்.

