/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுரை
/
குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுரை
ADDED : பிப் 28, 2025 11:10 PM
வால்பாறை, ; வால்பாறையில், தற்போது காலை, மாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவும், இரவில் கடுங்குளிரும் நிலவுகிறது.
இதனால், வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல், சளி, இருமலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, எஸ்டேட் தொழிலாளர்கள் வைரஸ் காய்ச்சலால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வால்பாறை அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், 'சிதோஷ்ண நிலை மற்றத்தால் மக்களுக்கு வழக்கமான காய்ச்சல், சளி, தலைவலி உள்ளிட் பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்நிலையில், குடிநீர் நன்றாக காய்ச்சி பருக வேண்டும். குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், டாக்டரின் பரிந்துரை இன்றி, தன்னிச்சையாக கடைகளில் மருந்து மாத்திரை வாங்கி உட்கொள்ளக்கூடாது.
காய்ச்சல் பாதிப்பு இருந்தால், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை,' என்றனர்.