/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்து, உயிர்பலியை தடுக்க விழிப்புணர்வு அவசியம்: பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுரை

ADDED : மே 18, 2024 12:53 AM

கோவை:'விபத்து, உயிர்பலியை தடுக்க டிரைவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்' என்று, போக்குவரத்துத்துறை அதிகாரிகள், பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
கோவையில் பஸ்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதும், உயிர்பலி ஏற்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அவசரக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், கோவையிலுள்ள 28 தனியார் பஸ் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் தலைமை வகித்தனர்.
காட்டூர் எஸ்.ஐ., அய்யாசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 'பஸ் டிரைவர்கள் சிலரின் கவனக்குறைவு காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
டிரைவர்கள் பணியின்போது மது போதையில் இல்லாமல் இருப்பதை அன்றாடம் ஊர்ஜிதம் செய்ய வேண்டும்.
சந்தேகம் இருக்கும்பட்சத்தில் பஸ்களை இயக்க அனுமதிக்கக் கூடாது' உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.