/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உதவிக்கு 1950 எண்ணை தொடர்பு கொள்ள அறிவுரை
/
உதவிக்கு 1950 எண்ணை தொடர்பு கொள்ள அறிவுரை
ADDED : மார் 26, 2024 10:16 PM

கோவில்பாளையம்:தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்னும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என விழிப்புணர்வு பேரணியில் தெரிவிக்கப்பட்டது.
நூறு சதவீதம் ஓட்டுப்பதிவு என்னும் இலக்கை அடைய பொது மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி சார்பில்,கோவில்பாளையத்தில் நேற்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் துவக்கி வைத்தார்.
இதில் அதிகாரிகள் பேசுகையில், 'வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்னும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்,' என்றனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன், தாசில்தார் நித்தில வள்ளி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், ஆசியன் பொறியியல் கல்லூரி மற்றும் பி.பி.ஜி., கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியர் பங்கேற்றனர்.
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தும் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.---

