/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடி வாழ்க்கை தரம் மேம்படுத்த ஆலோசனை
/
பழங்குடி வாழ்க்கை தரம் மேம்படுத்த ஆலோசனை
ADDED : ஏப் 27, 2024 12:55 AM
கோவை;கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், விவசாயிகள், பழங்குடியினரின் வாழ்க்கை தரம் மேம்படுத்துவது குறித்த, ஆலோசனை கூட்டம் நடந்தது.
'நபார்டு' வங்கியின் மாவட்ட மேம்பாட்டு மேலாளர் திருமலை ராவ் தலைமையில் நடந்த கூட்டத்தில், அதிக விளைச்சல் தரக்கூடிய குறைந்த கால வயதுடைய மரங்களை, பண்ணைக் காடுகள் திட்டம் வாயிலாக, விவசாயிகளுக்கு கொண்டு செல்வது, மரம் வளர்ப்பு, சிறு வன பொருட்கள் மதிப்பு கூட்டுதல், மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் குன்னிகண்ணன் தலைமையில், நபார்டு வங்கியுடன் இணைந்து, மரங்கள் வளர்ப்பதன் வாயிலாக, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை செயல்படுத்த உள்ளனர்.
நிறுவனம் சார்பில் இதற்கான அறிக்கை வழங்கப்பட்ட பின், நபார்டு வங்கி சார்பில் ஆலோசித்து நிதி ஒதுக்குவர். ஆலோசனை கூட்டத்தில் மூத்த விஞ்ஞானிகள் பலர் பங்கேற்றனர்.

