/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் நான்கு நாட்களுக்கு மழை: உரமிடுதலை ஒத்திவைக்க அறிவுறுத்தல்
/
கோவையில் நான்கு நாட்களுக்கு மழை: உரமிடுதலை ஒத்திவைக்க அறிவுறுத்தல்
கோவையில் நான்கு நாட்களுக்கு மழை: உரமிடுதலை ஒத்திவைக்க அறிவுறுத்தல்
கோவையில் நான்கு நாட்களுக்கு மழை: உரமிடுதலை ஒத்திவைக்க அறிவுறுத்தல்
ADDED : ஆக 17, 2024 11:33 PM
கோவை:கோவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக , தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக, 30-33 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 21-24 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும். காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 50 சதவீதமாகவும் பதிவாகும். காற்றின் வேகம் மணிக்கு, 8-20 கி.மீ., வேகத்தில் பெரும்பாலும், தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.
விவசாயிகள் நீர்பாசத்தினை மண்ஈரத்தினை பொருத்து ஒத்திவைக்கவும். உரமிடல் மற்றும் மருந்து தெளிப்பினை தவிர்க்கவேண்டும். நிலவும் வானிலையை பயன்படுத்தி இறவை பருத்தி நடவு செய்வதற்கு நிலம் தயாரித்து விதைப்பு செய்யவும்.
அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை இருப்பதால், நன்கு வடிகால் வசதி செய்து மழை நீர் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
தற்போதைய வானிலை, கறவை மாடுகளில் நோய் உருவாக்கும் காரணிகளை அதிகப்படுத்தும் என்பதால், பால் கறப்பதற்கு முன்பும், கறந்த பின்பும் 1 சதவீத பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலை கொண்டு கழுவவும்.
உழவர்கள் தங்கள் கால்நடைகளை ஏரி அல்லது குளத்தின் அருகில் உள்ள, புற்களை மேயாமல் பார்த்துக்கொள்வதன் வாயிலாக, தட்டைப்புழுக்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம்.