/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வலி நிவாரண மருந்து விற்க கட்டுப்பாடு கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை
/
வலி நிவாரண மருந்து விற்க கட்டுப்பாடு கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை
வலி நிவாரண மருந்து விற்க கட்டுப்பாடு கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை
வலி நிவாரண மருந்து விற்க கட்டுப்பாடு கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை
ADDED : ஜூலை 20, 2024 12:10 AM
பொள்ளாச்சி:மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞர்கள் பலர் போதைக்காக பயன்படுத்துகின்றனர். சில தினங்களுக்கு முன், போதை மருந்து விற்பனை செய்த நபரை, பொள்ளாச்சி நகரில் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனையை ஒழுங்குபடுத்த மருத்து கட்டுப்பாட்டு துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, மருந்தக ஆய்வாளர்கள், மருந்து மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மருந்துக் கடைகளில் சோதனை நடத்தி, கட்டுப்பாடுகளை பின்பற்ற மருந்துக் கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.
அதன்படி, டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இன்றி வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது. டாக்டர் பரிந்துரை சீட்டுடன் வலி நிவாரணி மருந்து வாங்க வருவோரின் ஏதேனும் ஒரு அடையாள அட்டை (இ-கார்டு), மருந்து சீட்டின் நகல் மற்றும் மொபைல் போன் எண் பெற வேண்டும். 18 வயதுக்கு குறைவான சிறார்கள், டாக்டர் பரிந்துரை சீட்டுடன் வந்தாலும், மாத்திரை வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மருந்துக்கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
மருந்தக ஆய்வாளர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் வால்பாறை பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் உள்ளன. இக்கடைகளில், டாக்டர் பரிந்துரை சீட்டு இருந்தாலும், வாடிக்கையாளர்களிடம் இ-கார்டு பெற்ற பின்னரே, வலி நிவாரணி மாத்திரைகளை வழங்க வேண்டும் என, மருந்து விற்பனையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வலி நிவாரண மாத்திரைகளை 'பல்க் ஆர்டர்' பெயரில் வாங்கக் கூடாது எனவும், போலி மருந்து சீட்டை கண்டறிந்து தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய மருந்துகளை 'ஆன்லைன்' வாயிலாக பெற வாய்ப்புள்ளதால், தனியாக 'சிரஞ்ச்' கோரும் நபர்கள் குறித்த விபரத்தை சேகரிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.