/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதரவற்றோர் மீட்பு பணி துரிதப்படுத்த அறிவுரை
/
ஆதரவற்றோர் மீட்பு பணி துரிதப்படுத்த அறிவுரை
ADDED : ஜூன் 17, 2024 12:26 AM
கோவை;ஆதரவற்றோருக்கான மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று தன்னார்வ தொண்டு நிறுவன ஆய்வுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பு இணைந்து, ஆதரவற்றோர் மற்றும் குடியிருப்பு இல்லாமல் தெருக்களில் தங்கியிருப்பவர்களை மீட்டு பராமரித்துவருகிறது.
இதற்கான ஆண்டு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில்; ஆண்டுமுழுக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்ட நபர்கள் அவர்களது தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் ஆதரவற்றோரை மீட்பதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், பொள்ளாச்சி சப் கலெக்டர் கேத்ரின் சரண்யா,
உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கத் குமார், ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனர் கணேஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.