/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் வினியோகம் குறைப்பு: சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
/
தண்ணீர் வினியோகம் குறைப்பு: சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
தண்ணீர் வினியோகம் குறைப்பு: சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
தண்ணீர் வினியோகம் குறைப்பு: சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
ADDED : மே 09, 2024 10:54 PM
அன்னுார்;குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி, பேரூராட்சி அறிவுறுத்தி உள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அன்னுாரில், வீடுகள் மற்றும் கடைகளில் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளதாவது :
கோடை வெப்பத்தாலும், கடும் வறட்சியாலும், பில்லுார் அணையின் நீர்மட்டம் குறைந்து விட்டது. அன்னுார் பேரூராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக குறைந்த அளவு குடிநீரே கிடைக்கிறது. எனவே, பேரூராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் கால இடைவெளி அதிகரிக்கப்படுகிறது. குடிநீர் வழங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் குடிநீரை குடிப்பதற்கும், சமையல் உபயோகத்திற்கு சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடும் வறட்சியால் ஆழ்துளை கிணற்று நீர்மட்டம் குறைந்து வருவதால் ஆழ்துளை கிணற்று நீரையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
மரம் மற்றும் செடி, கொடிகளுக்கு சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு துண்டு பிரசுரத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், ''தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தினசரி வழங்க வேண்டிய, 27 லட்சம் லிட்டருக்கு பதில், ஆறு லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டும் வழங்க முடியும் என்று கூறியுள்ளது. எனவே, பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.