/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடையர்பாளையம் மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
இடையர்பாளையம் மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
இடையர்பாளையம் மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
இடையர்பாளையம் மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : செப் 11, 2024 01:08 AM
கோவை:குனியமுத்துார், இடையர்பாளையத்தில் அமைந்துள்ள, மகாலட்சுமி அம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, வரும் 15ல் கும்பாபிேஷகம் நடக்கிறது.
இதற்கான விழா, நாளை அதிகாலை, 5:00 மணிக்கு, பரிகார வேள்வியுடன் துவங்குகிறது. காலை, 7:00 மணிக்கு, கோவிலுக்கு தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்படுகின்றன.
13ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி பூஜையும், காலை, 7:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணமும், மாலை 5:30 மணிக்கு, முதற்கால யாகசாலை பூஜையும் நடக்கின்றன.
14ம் தேதி காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
வரும், 15ம் தேதி காலை 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, யாத்ரா தானம் நடக்கிறது. காலை, 7:45 மணிக்கு கோபுர விமானங்களுக்கும், 8:15 மணிக்கு, அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
மதியம், 12:00 மணிக்கு அன்னதானமும், இரவு 7:00 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 16ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஊர்பொங்கல் வைக்கப்படுகிறது.