/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: இனிப்பு கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு
/
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: இனிப்பு கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: இனிப்பு கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: இனிப்பு கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 10, 2024 11:52 PM

மேட்டுப்பாளையம்;கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறந்தன. புதிதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் மேளதாளம் முழங்க, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திலும், மேட்டுப்பாளையம் நகரிலும் மொத்தம், 123 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின், நேற்று திறக்கப்பட்டன.
மேட்டுப்பாளையம் அருகே இடையர்பாளையத்தில் சுதந்திராபுரத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, நேற்று காலை, சிறுவர், சிறுமியர், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் வந்தனர். இவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். பின் அனைத்து மாணவ, மாணவியருக்கும், முதல் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை வழங்கினர்.
இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சிவசங்கரி ஆகியோர் கூறுகையில், ''காரமடை ஒன்றியம், மேட்டுப்பாளையம் நகரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய, நகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகளிலும், ஆங்கில மீடியத்தில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். அதனால் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு அலுவலர்கள் கூறினர்.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பெட்டதாபுரம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 21 மாணவர்கள் பள்ளியில் புதிதாக சேர்ந்தனர்.
இவர்களை வகுப்பு ஆசிரியர் நந்தினி மற்றும் மாணவர்கள் மேளதாளம் முழங்க அழைத்துச் சென்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, கீதா, குமரேசன், தலைமை ஆசிரியர் மதியழகன், கல்வியாளர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல அரசு உத்தரவுப்படி கோவில்மேடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

