/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கல்வி கற்கவும், சாதிக்கவும் பெண்ணுக்கு வயது தடையில்லை'
/
'கல்வி கற்கவும், சாதிக்கவும் பெண்ணுக்கு வயது தடையில்லை'
'கல்வி கற்கவும், சாதிக்கவும் பெண்ணுக்கு வயது தடையில்லை'
'கல்வி கற்கவும், சாதிக்கவும் பெண்ணுக்கு வயது தடையில்லை'
ADDED : ஏப் 09, 2024 12:49 AM

கோவை;பெண்ணுக்கு கல்வி கற்கவும், சாதிக்கவும் வயது ஒரு தடையில்லை என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி பேசினார்.
கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நன்றி நவிழும் விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேசியதாவது:
அனைத்து துறைகளிலும், பெண்கள் சாதனை புரிந்துள்ளனர். சிறந்த தொழிலதிபர்களாக வலம் வருகின்றனர். வேளாண்மைத் துறையிலும் பெண்கள் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. பெண்ணுக்கு கல்வி கற்கவும், சாதிக்கவும் வயது ஒரு தடையில்லை, என்றார்.
இதைத்தொடர்ந்து, பல்வேறு துறை சார்ந்த இளங்கலை, முதுகலைப் பயிலும் மாணவிகள், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி, உடற்பயிற்சிக் கல்வித் துறையிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற, 260க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, பல்கலைக்கழகப் பதிவாளர் கவுசல்யா வரவேற்றார். வேந்தர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், 2023--24ம் ஆண்டில் நடந்த நிகழ்வுகள், சாதனைகள் குறித்த ஆய்வறிக்கையை வாசித்தார்.

