/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராணுவத்தின் அக்னிவீர் பிரிவு ஆள்சேர்ப்பு; நேரு ஸ்டேடியத்தில் இன்று முகாம் துவக்கம்

ADDED : ஆக 01, 2024 01:21 AM
கோவை : இந்திய ராணுவத்தின் ஆள்சேர்ப்பு முகாம் நேரு ஸ்டேடியம் அரங்கில் இன்று முதல், 5ம் தேதி வரை நடக்கிறது.
இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம், கோவை நேரு ஸ்டேடியம் அரங்கில் இன்று முதல், 5ம் தேதி வரை நடக்கிறது.
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், கோவை ஆகிய, 11 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், அனைத்து ஆவணங்களையும் கட்டாயமாக கொண்டு செல்ல வேண்டும்.
முழு ஆவணங்களும் இல்லாதவர்கள், பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அக்னி வீரர்கள் தேர்வானது, ஆன்லைனில் கம்ப்யூட்டர் வழியாக மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற அல்லது பதிவு செய்ய உதவுகிறோம் என்று கூறும் மோசடி நபர்களிடம், கவனமாக இருக்க வேண்டும். கடின உழைப்பு மற்றும் தயாரிப்பு மட்டுமே தேர்வை உறுதி செய்யும்.
விளம்பரதாரர்கள் மற்றும் முகவர்களுக்கு, ஆள்சேர்ப்பு செயல்முறையில் எந்த பங்கும் இல்லை. எனவே, விண்ணப்பதாரர்கள் யாரிடமும் ஏமாற வேண்டாம் என, ஆள்சேர்ப்பு முகாம் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.